தூத்துக்குடியில் மன்னார் மீனவர்கள் எழுவர் கைது

தூத்துக்குடியில் மன்னார் மீனவர்கள் எழுவர் கைது

தூத்துக்குடியில் மன்னார் மீனவர்கள் எழுவர் கைது

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2020 | 7:07 pm

Colombo (News 1st) தமிழகம் – தூத்துக்குடியில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 7 பேர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி- லூர்தம்மாள்புரத்தில் இலங்கையைச் சேர்ந்த சிலர் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, பொலிஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, மன்னாரை சேர்ந்த 7 மீனவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

தூத்துக்குடி – தாளமுத்துநகர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு, மீனவர்களின் ஆவணங்களை ஆராய்ந்த போது, அவர்களின் விசாக்கள் காலாவதியாகியிருந்தமை தெரியவந்துள்ளது.

இலங்கையை சேர்ந்த ஏழு மீனவர்களிடமும் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்