டெங்கு அபாயம் மிக்க 34 வலயங்கள் ; இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் 

டெங்கு அபாயம் மிக்க 34 வலயங்கள் ; இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் 

டெங்கு அபாயம் மிக்க 34 வலயங்கள் ; இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் 

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2020 | 10:01 am

Colombo (News 1st) நாட்டில் டெங்கு அபாயம் மிக்க 34 வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் இந்த வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதன்காரணமாக குறித்த மாவட்டங்களில் இன்று (11) முதல் 3 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தில் முப்படை மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதாக விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்