22 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் சிரச TV

22 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் சிரச TV

by Staff Writer 10-06-2020 | 8:37 AM
Colombo (News 1st) இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் புதிய பரிணாமத்தை உருவாக்கிய சிரச TV இன்று (10) தனது 22ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறது. 'சிரச TV ஹெதென்னய் - ஹதன்னய்' என்ற தொனிப்பொருளில் சிரச TV இந்த வருடத்தில் இயங்கவுள்ளது. மத அனுஷ்டானங்களுக்கு முன்னுரிமையளித்து இம்முறை பிறந்ததின கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன.