அபேக்‌ஷா வைத்தியசாலைக்கு விசேட போக்குவரத்து சேவை

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு விசேட போக்குவரத்து சேவை

by Staff Writer 10-06-2020 | 1:31 PM
Colombo (News 1st) மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வருகைதரும் நோயாளர்களுக்காக நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதற்கு பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. சிகிச்சைகளுக்காக வருகைதரும் நோயாளர்கள் நாளாந்தம் முகங்கொடுக்கும் போக்குவரத்து சிக்கல்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 'அபேக்‌ஷா எக்ஸ்பிரஸ்' என பெயரிடப்பட்டுள்ள போக்குவரத்து சேவை இலங்கை போக்குவரத்து சேவையினூடாக முன்னெடுக்கப்படவுள்ளது. மாத்தளை, நுவரெலியா, அநுராதபுரம், ஹங்குரான்கெத்த, கண்டி, நிக்கவரெட்டிய, கொடக்கவெல, கல்கமுவ மற்றும் முல்லைத்தீவில் இருந்து மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு நோயாளர்களை அழைத்து வருவதற்காக இந்த போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.