டெஸ்ட் தொடருக்காக மேற்கிந்தியத்தீவுகள் அணி இங்கிலாந்திற்கு பயணம்

டெஸ்ட் தொடருக்காக மேற்கிந்தியத்தீவுகள் அணி இங்கிலாந்திற்கு பயணம்

டெஸ்ட் தொடருக்காக மேற்கிந்தியத்தீவுகள் அணி இங்கிலாந்திற்கு பயணம்

எழுத்தாளர் Staff Writer

10 Jun, 2020 | 8:55 am

Colombo (News 1st) வரலாற்று சிறப்பு மிக்க 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள மேற்கிந்தியத்தீவுகள் குழாம் இங்கிலாந்தை சென்றடைந்துள்ளது.

கொரோனா உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து அறிவிப்பு வெளிவந்துள்ள முதலாவது கிரிக்கெட் தொடர் இதுவாகும்

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இம்மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

உலகம் முழுவதும் Covid – 19 தொற்றின் அச்சுறுத்தல் தொடர்ந்த நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் தொடர் காலம் தாழ்த்தி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத்தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 8ஆம் திகதி சவுத்தம்டனில் ஆரம்பமாகவுள்ளது.

எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளும் முறையே ஜூலை 16 மற்றும் 24 ஆம் திகதிகளில் ஆரம்பமாகவுள்ளன.

தொடருக்கான 3 போட்டிகளையும் நேரடியாக கண்டுகளிக்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு அற்றுப்போயுள்ளது.

Covid -19 தொற்றின் அபாயத்தினை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஓர் அங்கமாக இந்தத் தொடர் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்