சொய்சாபுர துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய வாகனத்துடன் ஒருவர் கைது

சொய்சாபுர துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய வாகனத்துடன் ஒருவர் கைது

சொய்சாபுர துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய வாகனத்துடன் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

10 Jun, 2020 | 11:07 am

Colombo (News 1st) இரத்மலானை – சொய்சாபுர பகுதி ஹோட்டலொன்றில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்துவதற்காக சிலரை அழைத்துவந்த காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண புலனாய்வுப்பிரிவினால் பிலியந்தலையில் நேற்றிரவு நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்துக்காக வருகைதந்த ​காரும் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

50 வயதுடைய ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிசை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் இதுவரை 6 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்