by Staff Writer 09-06-2020 | 2:16 PM
Colombo (News 1st) நாடு தழுவிய ரீதியில் முடக்கல் நிலை அமுல்படுத்தப்பட்டமையால் ஐரோப்பாவில் 3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் தொற்றிலிருந்து பாதுகாக்கப்பட்டதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
முடக்கலை அமுல்படுத்தாவிடின், உயிரிழப்புகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருக்கும் என ஆய்வுகளை நடத்திய லண்டனிலுள்ள கல்லூரி சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும் தொற்று இன்னமும் ஒழிக்கப்படவில்லை எனவும் Covid - 19 தொற்று பரவும் ஆரம்ப கட்டத்திலேயே ஐரோப்பிய நாடுகள் உள்ளதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், லண்டன், ஜெர்மனி, இத்தாலி, நோர்வே, ஸ்பெயின், சுவீடன், சுவிட்ஸர்லாந்து, ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க் ஆகிய நாடுகளை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த நாடுகளில் கொரோனா வைரஸினால் 130,000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.