வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் வர்த்தமானியில் வௌியீடு   

வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் வர்த்தமானியில் வௌியீடு   

வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் வர்த்தமானியில் வௌியீடு   

எழுத்தாளர் Staff Writer

09 Jun, 2020 | 1:41 pm

Colombo (News 1st) பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் இன்று (09) வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.

அரச அச்சகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இந்த வர்த்தமானியை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்களுடன் விருப்பு இலக்கம் வௌியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான திகதி இவ் வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்