பொதுத்தேர்தல் எப்போது: வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் வௌியீடு

பொதுத்தேர்தல் எப்போது: வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் வௌியீடு

எழுத்தாளர் Staff Writer

09 Jun, 2020 | 8:29 pm

Colombo (News 1st) நாடு வழமைக்கு திரும்பி வருகின்ற நிலையில், தேர்தல் எப்போது நடத்தப்படும் என பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

தேர்தல் நடத்தப்படும் தினத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இதுவரையில் அறிவிக்கவில்லை. எனினும், வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் இன்று வௌியிடப்பட்டன.

22 தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள், வர்த்தமானி அறிவித்தல் ஊடாக தற்போது வௌியிடப்பட்டுள்ளன.

ஆணைக்குழுவினால் திகதி அறிவிக்கப்படும் வரையில், தேர்தல் நடைபெறவுள்ள நாள் தொடர்பில் வெவ்வேறு கருத்துக்களை வௌியிட வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இன்று கேட்டுக்கொண்டார்.

”ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் தேர்தலை நடத்த வேண்டும். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமைய, தேர்தலை நடத்தும் நாளை தீர்மானிக்கும் கடமையை நிறைவேற்ற எமக்கு இடமளியுங்கள்” என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல் வாக்களிப்பு முன்னெடுப்புகளுக்கு 60 முதல் 70 நாட்களை எடுத்துக்கொண்ட போதிலும், முன்னரைப் போன்று அதனை நடத்துவது கடினம் என அவர் சுட்டிக்காட்டினார்.

வாக்களிக்கும் 9 மணித்தியாலங்களுக்கு மேலதிகமாக இன்னுமொரு மணித்தியாலத்தை வழங்குவதா, இல்லாவிடின் நான்கு மணியாகும் போதும் வரிசையில் நிற்கும் அனைவருக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்குவதா என்பது தொடர்பில் தாம் ஆராய்வதாகவும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்