நீர்கொழும்பு சிறைச்சாலையில் சுற்றிவளைப்பு; 61 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிப்பு 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் சுற்றிவளைப்பு; 61 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிப்பு 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் சுற்றிவளைப்பு; 61 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிப்பு 

எழுத்தாளர் Staff Writer

09 Jun, 2020 | 12:15 pm

Colombo (News 1st) நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (09) விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

புலனாய்வுப் பிரிவின் ஒத்துழைப்புடன் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

இதன்போது , 61 கையடக்கத் தொலைபேசிகள், 51 சிம் அட்டைகள், 30 மின்கலங்கள், கையடக்கத் தொலைபேசிகளுக்கு மின் ஏற்றும் 71 கலங்கள் மற்றும் 16 கிராம் ஹெரோயின் ஆகியன  கைப்பற்றப்பட்டுள்ளன.

கையடக்கத் தொலைபேசிகளூடாக மேற்கொள்ளப்பட்டுள்ள கலந்துரையாடல்கள் தொடர்பில் பகுப்பாய்வு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்டுள்ள பொருட்களை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்