தென் கொரியாவுடனான தொடர்புகளை துண்டித்தது வட கொரியா

தென் கொரியாவுடனான தொடர்புகளை துண்டித்தது வட கொரியா

தென் கொரியாவுடனான தொடர்புகளை துண்டித்தது வட கொரியா

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

09 Jun, 2020 | 11:23 am

Colombo (News 1st) தென் கொரியாவிற்கும் தமது நாட்டிற்கும் இடையே தொடர்பினை ஏற்படுத்தும் தொடர்பாடல் இணைப்புகளை துண்டிக்கவுள்ளதாக வட கொரியா நடவடிக்கை எடுத்துள்ளது.

தென் கொரியாவிலுள்ள வட கொரிய எதிர்ப்பாளர்கள், வட கொரியா தொடர்பில் விமர்சித்து துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.

இதனையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், 21 மாதங்களுக்கு பின்னர் இரு நாடுகளுக்கிடையே காலை வேளையில் முன்னெடுக்கப்படும் தொலைபேசி கலந்துரையாடலில், தென் கொரியாவுடனான அனைத்து தொடர்பாடல் சேவைகளையும் நிறுத்துவதாக வட கொரியா அறிவித்துள்ளது.

வட கொரிய எல்லையான கோசோங் நகரிலுள்ள தொடர்பாடல் அலுவலகம் ஊடாகவே தொலைபேசி சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இருநாடுகளுக்கும் இடையே நல்லுறவை பேணுவதற்காக 2018 ஆம் ஆண்டு இந்த அலுவலகம் நிறுவப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்