கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொள்ளை: சந்தேகநபர் கைது 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொள்ளை: சந்தேகநபர் கைது 

எழுத்தாளர் Staff Writer

09 Jun, 2020 | 3:23 pm

Colombo (News 1st) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் நுழைந்து பணத்தை கொள்ளையிட்டு தப்பிச்சென்ற நபர் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டார்.

அரச வைத்தியசாலையொன்றில் சேவையாற்றும் வைத்தியரொருவர், தேசிய வைத்தியசாலைக்குள் நுழைந்து பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.

ஊதியப் பிரிவின் அதிகாரியொருவருக்கு போலித் துப்பாக்கியைக் காண்பித்து, 79 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டதாக, தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் லயனல் முஹந்திரம் குறிப்பிட்டார்.

வைத்தியசாலை ஊழியர்களின் சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்காக இந்த நிதி கொண்டுவரப்பட்டிருந்தது.

பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர், பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்