கல்கிசை கடற்கரையில் குப்பைகள் குவிகின்றமை தொடர்பில் அறிக்கை கோரல் 

கல்கிசை கடற்கரையில் குப்பைகள் குவிகின்றமை தொடர்பில் அறிக்கை கோரல் 

கல்கிசை கடற்கரையில் குப்பைகள் குவிகின்றமை தொடர்பில் அறிக்கை கோரல் 

எழுத்தாளர் Staff Writer

09 Jun, 2020 | 11:23 am

Colombo (News 1st) கல்கிசை கடற்கரையில் குப்பைகள் குவிகின்றமை தொடர்பில் கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

கல்கிசை கடற்கரையில் குப்பைகள் காணப்படுகின்றமை தொடர்பில் நேற்று (08) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இந்த ஆலோசனையை வழங்கியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து இந்த விடயம் தொடர்பில் ஆராயவுள்ளனர்.

கல்கிசை கடற்கரையில் குப்பைகள் குவிந்துள்ளமை தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணையை மேலும் வலுப்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இந்த விடயம் குறித்து ஆராய்வதற்கு பதில் பொலிஸ் மா அதிபர் சி.ரி. விக்ரமரத்ன நேற்று முன்தினம் கல்கிசைக்கு சென்றிருந்தார்.

குப்பைகள் குவிந்திருந்த கடற்கரையில் நகரசபை ஊழியர்கள், சுற்றாடல் பொலிஸார், தொண்டர் அமைப்புகள் உள்ளிட்ட பலர் ஒன்றிணைந்து சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்