உடற்பயிற்சியின் போது முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை – சுகாதார அமைச்சு

உடற்பயிற்சியின் போது முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை – சுகாதார அமைச்சு

உடற்பயிற்சியின் போது முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை – சுகாதார அமைச்சு

எழுத்தாளர் Staff Writer

09 Jun, 2020 | 10:26 am

Colombo (News 1st) தனியாள் உடற்பயிற்சி மற்றும் நடைபாதை உடற்பயிற்சி ஆகியவற்றின் போது முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் சமூக இடைவௌியை மாத்திரம் பேணுதல் போதுமானது என சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன குறிப்பிட்டுள்ளார்.

உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது அதிக ஒட்சிசன் தேவைப்படுவதால் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என அவர் கூறியுள்ளார்.

எனினும், பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போதும் அலுவலக பணியின்போதும் முகக்கவசம் அணிதல் கட்டாயமானதாகும்.

சன நெரிசலான இடங்களிலும் முகக்கவசம் அணிதல் கட்டாயமானது எனவும் அதனை இடைக்கிடை தொடவேண்டாம் எனவும் விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்