இலங்கை போக்குவரத்து சபை பஸ்களுக்கு முற்கொடுப்பனவு அட்டைகளை அறிமுகப்படுத்த தீர்மானம்

இலங்கை போக்குவரத்து சபை பஸ்களுக்கு முற்கொடுப்பனவு அட்டைகளை அறிமுகப்படுத்த தீர்மானம்

இலங்கை போக்குவரத்து சபை பஸ்களுக்கு முற்கொடுப்பனவு அட்டைகளை அறிமுகப்படுத்த தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

09 Jun, 2020 | 6:56 pm

Colombo (News 1st) இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களுக்காக முற்கொடுப்பனவு அட்டைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதத்தின் இறுதிப் பகுதியில் முற்கொடுப்பனவு அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பயணச்சீட்டுகளை விநியோகிக்கும் போது பெற்றுக்கொள்ளப்படும் பணத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவக்கூடிய வாய்ப்புள்ள நிலையில், அதனை தவிர்க்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த முற்கொடுப்பனவு அட்டைகளை விரைவில் ரயில் போக்குவரத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளில் பஸ் நடத்துனர் மற்றும் சாரதிக்கு மேலதிக கொடுப்பனவு வழங்குமாறு போக்குவரத்து அமைச்சர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்