நியூசிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் முற்றாக நீக்கம்

நியூசிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் முற்றாக நீக்கம்

நியூசிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் முற்றாக நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

08 Jun, 2020 | 10:25 pm

Colombo (News 1st) நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று முற்றாக கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து Covid கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன.

இதற்கமைய சமூக இடைவௌி பேணப்படுவது அவசியமில்லை எனவும் ஒன்றுகூடுவதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களில் நியூசிலாந்தில் கொரோனா தொற்று எவருக்கும் உறுதிப்படுத்தப்படவில்லை.

நாட்டில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லையென்பதை அறிவித்த அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் (Jacinda Ardern) இதன்போது சிறிதாக நடனமாடி மகிழ்ச்சியை வௌிப்படுத்தியுள்ளார்.

கோரோனா அற்ற வாழ்க்கையை இலகுவான மார்க்கத்தில் அடைந்துவிடவில்லை எனவும் சுகாதார விடயத்தில் இருந்த அர்ப்பணிப்பும் கவனமும் இனிவரும் காலங்களில் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதில் பயன்படுத்தப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்