பொது போக்குவரத்து தொடர்பிலான இறுதி தீர்மானம் நாளை

பொது போக்குவரத்து சேவை தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

by Staff Writer 07-06-2020 | 2:01 PM
Colombo (News 1st) ஜனாதிபதியுடன் நாளை (08) கலந்துரையாடியதன் பின்னர், பொது போக்குவரத்து சேவையை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு சில துறைகளை சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்போது ஜனாதிபதி மற்றும் சுகாதாரத் துறையினர் வழங்கும் ஆலோசனைக்கு அமைய பொது போக்குவரத்து சேவையை முன்னெடுப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் கூறியுள்ளார். கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் பொது போக்குவரத்து சேவை வௌி மாவட்டங்களுக்கும் தற்போது முன்னெடுக்கப்படுகிறது. இதேவேளை, தற்போது பொது போக்குவரத்து சேவைக்கான பஸ் தட்டுப்பாடு காரணமாக சுற்றுலாக்களுக்கான பஸ்களையும் பாடசாலை போக்குவரத்து பஸ்களையும் சாதாரண போக்குவரத்தில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 250 பஸ்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.