by Staff Writer 07-06-2020 | 10:01 AM
Colombo (News 1st) கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பஸ் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த வரையறை தளர்த்தப்பட்டுள்ளது.
நாளை (08) முதல் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கொழும்பு வரை பயணிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
இதேவேளை, சுற்றுலாக்களுக்கான பஸ்கள் மற்றும் பாடசாலை போக்குவரத்து பஸ்களையும் சாதாரண போக்குவரத்தில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 250 பஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் H. பண்டுக்க குறிப்பிட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை இரவு வேளையில் மாத்திரம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அரச மற்றும் தனியார் துறையினர் தமது அலுவலக செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது, கொரோனா ஒழிப்பிற்கான சுகாதார வழிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுதல் அவசியம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.