கொழும்பு பேராயர் அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை

கிறிஸ்தவ தேவாலயங்களில் ஆராதனை நடத்த அனுமதி வழங்குமாறு கொழும்பு பேராயர் கோரிக்கை

by Staff Writer 07-06-2020 | 11:35 AM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கமைய வரையறுக்கப்பட்ட மக்களுடன் ஆராதனைகளை மேற்கொள்வதற்காக கிறிஸ்தவ தேவாலயங்களைத் திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாளாந்த ஆராதனைகளை நடாத்தவும் அனுமதி வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் அடையாளம் காணப்பட்ட நாள் தொடக்கம் வீட்டிலிருந்தே பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறு கிறிஸ்தவ மக்கள் வேண்டப்பட்டிருந்ததாக கொழும்பு பேராயர் கூறியுள்ளார். இந்தக் கோரிக்கைக்கு அமைய மக்கள் செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆகவே, தற்போதைய நிலைக்கு அமைய வரையறுக்கப்பட்ட மக்கள் தொகையுடன் தினமும் கிறிஸ்தவ தேவாலயங்களில் பிரார்த்தனைகளை நடாத்த அனுமதி வழங்குமாறு கொழும்பு பேராயர் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாகவும் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.