பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சொய்சாபுர தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் பலி

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சொய்சாபுர தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் பலி

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சொய்சாபுர தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் பலி

எழுத்தாளர் Staff Writer

07 Jun, 2020 | 9:00 am

Colombo (News 1st) இரத்மலானை – சொய்சாபுர பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் உள்ளிட்ட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர், பொலிஸாருடன் இடம்பெற்ற பரபஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

பாதாள உலகக் குழுவின் தலைவர் ஒருவர் உள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மினுவங்கொடை பகுதியில் இன்று (07) அதிகாலை சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டார்.

பேலியகொடை பிராந்திய குற்ற விசாரணை அதிகாரிளால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சந்கேநபருக்கும் பொலிஸாருக்கும் இடையில் பரபஸ்பர துப்பாக்கிா் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

பல கொலைச் சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் குறித்த சந்தேகநபர் தேடப்பட்டவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

‘கொனாகோவிலே ராஜா’ என்றழைக்கப்பட்ட பத்திரனகே ராஜா விமலதர்ம என்பவரே துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தவராவார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்