சுரக்‌ஷா காப்புறுதி திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானம்

சுரக்‌ஷா காப்புறுதி திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானம்

சுரக்‌ஷா காப்புறுதி திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

07 Jun, 2020 | 1:15 pm

Colombo (News 1st) பாடசாலை மாணவர்களுக்கான சுரக்‌ஷா காப்புறுதி திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதுவரை சுரக்‌ஷா காப்புறுதி திட்டத்திற்கு விண்ணப்பிக்காத மாணவர்கள், உரிய முறையில் விண்ணப்பத்தை பூர்த்திசெய்து வலயக்கல்வி காரியாலயம் அல்லது கல்வி அமைச்சுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுரக்‌ஷா காப்புறுதி திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்துகொள்வதற்கு 011 2784163, 011 2784872 அல்லது 011 3641555 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்