கொரோனாவிடம் அரசாங்கம் தோல்வி – ரணில்

கொரோனாவிடம் அரசாங்கம் தோல்வி – ரணில்

கொரோனாவிடம் அரசாங்கம் தோல்வி – ரணில்

எழுத்தாளர் Fazlullah Mubarak

07 Jun, 2020 | 8:34 pm

கொரோனா ஒழிப்பு தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொரோனா தொற்று ஆரம்பமான சந்தர்ப்பத்தில், அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதென எதிர்க்கட்சி தீர்மானித்தது என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர், நாளாந்தம் 5,000 PCR பரிசோதனைகளை நடத்துமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளர்.

ஆயினும் பெப்ரவரி 18ஆம் திகதியிலிருந்து இதுவரை 75,239 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அரசியல் இலாபம் பெறும் நோக்கம் மாத்திரமே அரசாங்கத்திடம் காணப்பட்டதாகவும் முன்னாள் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவையனைத்திற்கும் அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என குறிப்பிட்டுள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சரவையின் பொறுப்புக்கூறலையும் நினைவூட்டியுள்ளார்.

பிச்சைக்காரர்களைப் போன்று, பாகிஸ்தான், சீனா மற்றும் இந்தியாவினால் வழங்கப்பட்டதை பெற்றதோடு மாத்திரம் வரையறைப்படுத்திக்கொண்ட அரசாங்கம் முகக்கவசங்களை கூட கொள்வனவு செய்யவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உலக வங்கியினால் 230 மில்லியன் டொலர் இலங்கைக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடும் முன்னாள் பிரதமர் அந்த 230 மில்லியன் டொலருக்கு என்ன நடந்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுபான உற்பத்தி நிறுவனங்கள் பழைய மதுபானங்களை விற்றுள்ளதாக தெரிவிக்கும் முன்னார் பிரதமர் இவையனைத்திற்கும் அரசாங்கமே பொறுப்பு எனவும் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்