மினுவங்கொடையில் T56 ரக துப்பாக்கியுடன் மூவர் கைது

by Staff Writer 06-06-2020 | 9:29 PM
Colombo (News 1st) மினுவங்கொடை, பத்தண்டுவன பகுதியில் T56 ரக துப்பாக்கியுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து T56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் நான்கு மெகசின்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் நாரஹேன்பிட்டி மற்றும் கம்பஹாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.