பதுளை – கெரண்டிஎல்ல நீர்வீழ்ச்சியில் மூழ்கி மூவர் உயிரிழப்பு

பதுளை – கெரண்டிஎல்ல நீர்வீழ்ச்சியில் மூழ்கி மூவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Jun, 2020 | 3:09 pm

Colombo (News 1st) பதுளை – கெரடியெல்ல நீர்வீழ்ச்சியில் மூழ்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த குழியில் குளித்துக்கொண்டிருந்த போது இன்று முற்பகல் இவர்கள் நீரிழ் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

38 வயதான ஒருவரும் 12 வயதான அவரது மகளும் 13 வயதான உறவுக்கார சிறுமியுமே உயிரிழந்துள்ளனர்.

இந்த மூவரும் இன்று முற்பகலில் கெரண்டிஎல்ல நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்றிருந்த போது, சிறுமி தவறி வீழ்ந்துள்ளார்.

மகளைக் காணாததால் தந்தை நீரில் குதித்துள்ளதுடன், அவரைத் தொடர்ந்து மற்றைய சிறுமியும் நீரில் குதித்ததாக அப்பகுதியில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சில மணித்தியாலங்களின் பின்னர் மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டு மரண விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்