by Bella Dalima 06-06-2020 | 4:01 PM
Colombo (News 1st) உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து வௌியேறப்போவதாக பிரேஸில் ஜனாதிபதி Jair Bolsonaro எச்சரித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனம் பாரபட்சமாகவும் அரசியல் ரீதியாகவும் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டி, அவர் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு முன்பாக இலத்தீன் அமெரிக்க நாடுகள், முடக்கல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்ததையடுத்தே பிரேஸில் ஜனாதிபதியின் இந்தக் கருத்து வௌியாகியுள்ளது.
34,000 கொரோனா வைரஸ் மரணங்கள் பதிவாகியுள்ள பிரேஸில், அதிகளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்ட நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.