by Staff Writer 06-06-2020 | 9:16 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - இரணைமடு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த கடற்படையினர் இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கிளிநொச்சி இரணைமடு விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த, வெலிசறை கடற்படை முகாமை சேர்ந்த 70 கடற்படையினரை வீடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குறித்த 70 கடற்படையினருக்கும் PCR பரிசோதனையில் தொற்று இல்லை என்ற மருத்துவ சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.