கல்கிசை கடற்கரையில் கழிவுகளைக் கொட்டியது யார்? 

கல்கிசை கடற்கரையில் உள்ளூராட்சி நிறுவனத்தால் சேகரிக்கப்பட்ட கழிவுகள் கொட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

by Staff Writer 05-06-2020 | 2:35 PM
Colombo (News 1st) கல்கிசை கடற்கரையில் ஏதேனும் நிறுவனத்தால் கழிவுகள் கொட்டப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிப்பதாக கரையோர பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கரையோர பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார். கல்கிசை கடற்கரையில் சுமார் 200 சதுர அடி பரப்பில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அவற்றை சோதனையிட்ட போது, கடந்த மே மாதம் பொதியிடப்பட்டமைக்கான திகதி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். யாரேனும் ஒருவரால் அல்லது உள்ளூராட்சி நிறுவனத்தால் சேகரிக்கப்பட்ட கழிவுகளே கொட்டப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுவதாகவும் கரையோர பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி கூறினார்.

ஏனைய செய்திகள்