வெட்டுக்கிளிகளின் தாக்கம் தொடர்பில் 1920 என்ற இலக்கத்திற்கு அறிவியுங்கள்

வெட்டுக்கிளிகளின் தாக்கம் தொடர்பில் 1920 என்ற இலக்கத்திற்கு அறிவியுங்கள்

வெட்டுக்கிளிகளின் தாக்கம் தொடர்பில் 1920 என்ற இலக்கத்திற்கு அறிவியுங்கள்

எழுத்தாளர் Staff Writer

05 Jun, 2020 | 2:53 pm

Colombo (News 1st) வட மாகாணத்தின் சில பகுதிகளிலும் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலும் பயிர்செய்கைகளில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

ஓரிரு தினங்களில் நாட்டின் பல பகுதிகளில் வெட்டுக்கிளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களத்தின் பணிபாளர் நாயகம், கலாநிதி W.M.W.வீரகோன் தெரிவித்தார்.

குருநாகல் – மாவத்தகம பகுதியிலேயே வெட்டுக்கிளிகள் முதலில் அடையாளம் காணப்பட்டன.

சோளம், கொய்யா, வாழை, இறப்பர், தெங்கு உள்ளிட்ட செய்கைகளில் வெட்டுக்கிளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் விவசாய திணைக்களத்தின் பணிபாளர் நாயகம் குறிப்பிட்டார்.

வெட்டுக்கிளிகளின் தாக்கம் அடையாளம் காணப்பட்டால் அது குறித்து 1920 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு விவசாயிகள் கோரப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்