by Staff Writer 05-06-2020 | 5:47 PM
Colombo (News 1st) பொதுத்தேர்தலில் வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க விதிகள் தொடர்பான கோவையை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது.
அதி விசேட வர்த்தமானி ஒன்றினூடாக இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
பொதுத்தேர்தல் தொடர்பான ஊடக விதிமுறைகளும் இந்த அதி விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஊடக நிறுவனங்கள் இந்த ஒழுங்கு விதிகளை பின்பற்றுகின்றனவா என்பது தொடர்பில் ஆராய குழுவொன்றையும் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த குழுவிற்கான கடமைகள் மற்றும் உறுப்பினர்களின் விபரங்கள் பொதுத்தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் வௌியிடப்படவுள்ளது.
குறித்த ஒழுக்க கோவை மற்றும் ஊடக ஒழுங்குமுறைகள் ஆகியன பொதுத்தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் நாள் தொடக்கம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அமுலில் காணப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.