நாட்டில் மேலும் 10 பல்கலைக்கழகங்களை நிர்மாணிக்க திட்டம்

நாட்டில் மேலும் 10 பல்கலைக்கழகங்களை நிர்மாணிக்க திட்டம்

நாட்டில் மேலும் 10 பல்கலைக்கழகங்களை நிர்மாணிக்க திட்டம்

எழுத்தாளர் Staff Writer

05 Jun, 2020 | 1:35 pm

Colombo (News 1st) பல்கலைக்கழகங்களில் நெரிசலைக் குறைப்பதற்காக நாட்டில் மேலும் 10 பல்கலைக்கழகங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்வாங்கும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு, ஶ்ரீஜயவர்தனபுர, பேராதனை, ருஹூணு, களனி , யாழ்ப்பாணம் உட்பட நாட்டில் 15 பல்கலைக்கழகங்கள் உள்ளன.

பட்டப்படிப்பிற்கு தகுதி பெறும் மாணவர்களில் 31,000 மாணவர்கள் மாத்திரமே பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

அதனால் ஏனைய மாணவர்கள் தனியார் பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வியற்கல்லூரிகளுக்கு அனுமதி பெறுகின்றனர்.

இந்நிலையில், இந்த வருடம் புதிய பீடங்களையும் புதிய கல்வியல் பிரிவுகளையும் அமைப்பதன் மூலம் பல்கலைக்கழகங்களுக்கு 37,500 பேரை இணைத்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

இதேவேளை, எதிர்வரும் 15 ஆம் திகதி அனைத்து பல்கலைக்கழங்களினதும், மருத்துவ பீடங்களை இறுதியாண்டு மாணவர்களுக்காக திறப்பதற்கு தயாராகவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்