இலங்கைக்கு கடத்த திட்டம்: 2 கோடி இந்திய ரூபா பெறுமதியான போதைப்பொருட்களை தமிழக பொலிஸார் கைப்பற்றினர்

by Staff Writer 05-06-2020 | 8:47 PM
Colombo (News 1st) தமிழகத்தின் இராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கோடி இந்திய ரூபா பெறுமதியான போதைப்பொருட்களை தமிழக பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இராமநாதபுரத்தின் திருவாடானை பகுதியிலுள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருளே இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இராமநாதபுரம் பொலிஸார் இன்று நண்பகல் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இரண்டு கோடி இந்திய ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் மான் கொம்பும் சிங்கப் பற்களும் மீட்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் இராமேஸ்வரம் செய்தியாளர் தெரிவித்தார். எனினும், இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. இதேவேளை, மே மாதம் 23 ஆம் திகதி திருவாடானை பகுதியில் 5 கோடி இந்திய ரூபா மதிப்புள்ள போதைப்பொருட்களை இலங்கைக்கு கடத்த முயற்சித்த 9 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்