சிலாபம் வைத்தியசாலையில் புற்றுநோயாளர்களுக்கு வீடியோ தொழில்நுட்பம் ஊடாக பரிசோதனை 

சிலாபம் வைத்தியசாலையில் புற்றுநோயாளர்களுக்கு வீடியோ தொழில்நுட்பம் ஊடாக பரிசோதனை 

சிலாபம் வைத்தியசாலையில் புற்றுநோயாளர்களுக்கு வீடியோ தொழில்நுட்பம் ஊடாக பரிசோதனை 

எழுத்தாளர் Staff Writer

04 Jun, 2020 | 8:10 am

Colombo (News 1st) புற்றுநோயாளர்களை வைத்தியசாலைக்கு அழைக்காது, வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் பரிசோதிக்கும் நடவடிக்கை, சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் புற்றுநோயாளர்களை வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக பரிசோதிக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென வைத்தியசாலை பணிப்பாளர், டொக்டர் கபில மல்லவாரச்சி தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு சுமார் 50 நோயாளர்கள் சிலாபம் வைத்தியசாலைக்கு வருகை தருகின்றனர்.

இந்த புதிய நடைமுறையின் கீழ், வைத்தியசாலைக்கு வருகைதரும் நோயாளர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என வைத்தியசாலை பணிப்பாளர் கூறியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்