கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1749 ஆக அதிகரிப்பு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1749 ஆக அதிகரிப்பு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1749 ஆக அதிகரிப்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

04 Jun, 2020 | 6:30 am

Colombo (News 1st) Update: 03/06/2020; 11.55 PM: நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1,749ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினத்தில் (03) 66 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்றைய தினம் 13 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 836 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, வைத்தியசாலைகளில் 888 நோயாளர்கள்
சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து, தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1749 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

———————————————————————————————————————————

03/06/2020; 11.00 PM: நாட்டில் Covid – 19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1735 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்