by Staff Writer 03-06-2020 | 6:14 PM
Colombo (News 1st) ஆரையம்பதி - கோவில்குளம் பகுதியில் திடீர் சுகயீனமுற்ற 18 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு 4 பேர் அனுமதிக்கப்பட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், டொக்டர் கலாரஞ்சனி கணேஸ் தெரிவித்தார்.
இன்று 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அனுமதிக்கப்பட்டவர்களில் 8 சிறார்கள் அடங்குவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
வயிற்றோட்டம், வாந்தி, காய்ச்சல் போன்ற குணங்குறிகளுடன் இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்குத் தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும், பாதிப்புகள் ஏதும் இல்லை எனவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் கலாரஞ்சனி கணேஸ் தெரிவித்தார்.