சகல வேட்பாளர்களுக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் - PAFFREL  வலியுறுத்தல்

by Staff Writer 03-06-2020 | 12:25 PM
Colombo (News 1st) பொதுத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டியது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென PAFFREL அமைப்பு தெரிவித்துள்ளது. PAFFREL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி இன்று (03) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.