உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடலவிற்கு பிணை

உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடலவிற்கு பிணை

by Staff Writer 03-06-2020 | 4:37 PM
Colombo (News 1st) உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடலவிற்கு பிணை வழங்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகிய போதே அவருக்கு பிணை வழங்கப்பட்டது. வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய போது போலியாக சாட்சியை உருவாக்கியமை தொடர்பில், அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி ராஜகிரிய பகுதியில், அப்போது அமைச்சராக செயற்பட்ட பாட்டலி சம்பிக்க ரணவக்க பயணித்த வாகனம் விபத்திற்குள்ளானதில் இளைஞர் ஒருவர் காயமடைந்தார். இதன்போது, அமைச்சரின் சாரதியே வாகனம் செலுத்தியதாக பதிவு செய்யுமாறு வெலிக்கடை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடல மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து, உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடலவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவும், சட்ட மா அதிபர் திணைக்களமும் நேற்று (02) நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.