by Staff Writer 03-06-2020 | 10:19 AM
Colombo (News 1st) வவுனியா - கனகராயன்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
லொறி ஒன்றுடன் மோட்டார்சைக்கிள் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அடங்குகின்றார்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனன.