வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Jun, 2020 | 9:09 pm

Colombo (News 1st) வவுனியா – கனகராயன்குளம், A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளானதாகவும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே உயிரிழந்ததாகவும்
பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் – அரசடி வீதி, நல்லூரைச் சேர்ந்த 19 வயதான ஜெ.திசிகாந்தன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரும் யாழ். பளை வீதியைச் சேர்ந்த 20 வயதான அவருடைய நண்பருமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பில் சேவையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர், விடுமுறை காரணமாக தனது நண்பருடன் யாழ்ப்பாணம் செல்லும் வழியிலேயே இந்த விபத்தை எதிர்கொண்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்