லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பெண்ணின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது 

லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பெண்ணின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது 

எழுத்தாளர் Staff Writer

03 Jun, 2020 | 8:51 pm

Colombo (News 1st) தலவாக்கலை – லிந்துலை, சென் கூம்ஸ் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி நேற்று (02) உயிரிழந்த பெண்ணின் ஜனாஸா இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

குறித்த பெண்ணின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

04 பிள்ளைகளின் தாயான​ 59 வயதான அலிமா பீபீ என்ற பெண்ணே உயிரிழந்தார்.

அவரின் ஜனாஸா சென் கூம்ஸ் தோட்ட பொது மயானத்தில் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்