பொகவந்தலாவையில் 3 சிறார்கள் உள்ளிட்ட ஐவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர்

பொகவந்தலாவையில் 3 சிறார்கள் உள்ளிட்ட ஐவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர்

பொகவந்தலாவையில் 3 சிறார்கள் உள்ளிட்ட ஐவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர்

எழுத்தாளர் Staff Writer

03 Jun, 2020 | 6:46 pm

Colombo (News 1st) பொகவந்தலாவை – கெம்பியன் ஓல்டி தோட்டத்தில் மூன்று சிறார்கள் அடங்கலாக 05 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

கெம்பியன் ஓல்டி தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு அருகில் இன்று பகல் 2 மணியளவில் இவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்கானதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சிறுவர் நிலையத்திற்கு அருகில் இருந்த 3 சிறார்களும் அவர்களைக் காப்பாற்ற சென்ற ஆண் ஒருவரும், பெண் ஒருவருமே குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இவர்கள் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஓல்டி தேயிலை தோட்டத்திலிருந்த குளவிக்கூடு ஒன்று கலைந்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்