ஜனாதிபதி ஆணைக்குழுவில் 711 பேர் வாக்குமூலம் பதிவு 

ஏப்ரல் 21 தாக்குதல்; ஜனாதிபதி ஆணைக்குழுவில் 711 பேர் வாக்குமூலம் பதிவு 

by Staff Writer 02-06-2020 | 10:44 AM
Colombo (News 1st) ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இதுவரை 711 பேர் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். 146 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் H.N.B.P. ஹேரத் குறிப்பிட்டார். சாட்சி பதிவிற்காக இன்றும் 03 பேர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் 21 தாக்குதலின் போது தெமட்டகொட மாடிக்குடியிருப்பில் பணியாற்றிய பெண் காவலாளி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் வத்தளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர் ஒருவரும் இன்று ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவில் கடமையாற்றிய தலைமை உத்தியோகத்தர் நேற்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சி வழங்கியிருந்தார். ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.