லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழப்பு

லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Jun, 2020 | 5:23 pm

Colombo (News 1st) தலவாக்கலை – லிந்துலை சென்கூம்ஸ் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

4 பிள்ளைகளின் தாயான​ 59 வயதுடைய பெண்​ணொருவரே உயிரிழந்துள்ளார்.

கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போது குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

குளவிக் கொட்டுக்கு இலக்காகிய மேலும் 7 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஆண்கள் இருவரும் பெண்கள் ஐவரும் அடங்குகின்றனர்.

இதேவேளை, கடந்த மாதம் 25 ஆம் திகதி ஹட்டன் – டிக்கோயா தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நான்கு பிள்ளைகளின் தாயான பெண்ணொருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்