மும்பையைத் தாக்கவுள்ள நிசர்கா புயல்

மும்பையைத் தாக்கவுள்ள நிசர்கா புயல்

மும்பையைத் தாக்கவுள்ள நிசர்கா புயல்

எழுத்தாளர் Bella Dalima

02 Jun, 2020 | 4:51 pm

Colombo (News 1st) நிசர்கா புயல் நாளை (03) கரையைக் கடக்கவுள்ளதால் மும்பை மற்றும் அதனை அண்மித்துள்ள மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நிசர்கா சூறாவளி அச்சத்தினால் மும்பை நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நிசர்கா புயல் மகாராஷ்ட்ரா மற்றும் குஜராத் கடற்பிராந்தியங்களூடாக நகர்வதுடன், எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் அது சூறாவளியாக வலுவடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

1882 ஆம் ஆண்டின் பின்னர் மும்பையைத் தாக்கும் சூறாவளியாக நிசர்கா சூறாவளி பதிவாகவுள்ளது.

சூறாவளியினால் நிலச்சரிவுகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியாவின் மேற்குவங்கத்தைத் தாக்கிய ஆம்பன் சூறாவளியினால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்