முகமாலையில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இரண்டாவது நாளாக அகழ்வு

முகமாலையில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இரண்டாவது நாளாக அகழ்வு

எழுத்தாளர் Staff Writer

02 Jun, 2020 | 8:42 pm

Colombo (News 1st) கிளிநொச்சி- முகமாலை பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இரண்டாவது நாளாக இன்று அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த பகுதியில் கடந்த 22 ஆம் திகதி கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் மனித எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டன.

பளை பொலிஸார் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்ததையடுத்து, குறித்த இடத்தில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, கடந்த 26 ஆம் திகதி அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், இரண்டாவது
நாளாக இன்று அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.

கிளிநொச்சி நீதவான் T.சரவணராஜா முன்னிலையில் இன்று பிற்பகல் 02.00 மணியளவில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்