நாட்டில் 1643 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் 1643 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் 1643 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

எழுத்தாளர் Staff Writer

02 Jun, 2020 | 6:49 am

Colombo (News 1st) நாட்டில் Covid – 19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1643 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று (01) 10 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களில், கடற்படையை சேர்ந்த 02 பேரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணிய 02 பேரும் வௌிநாடுகளில் இருந்து வருகைதந்த 06 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 811 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, 821 கொரோனா நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

குவைத்திலிருந்து நாடு திரும்பிய 45 வயதான ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்