காட்டுத்தீ சம்பவங்கள் 158% அதிகரிப்பு: பழமையான மரங்கள் தீக்கிரையாகின

காட்டுத்தீ சம்பவங்கள் 158% அதிகரிப்பு: பழமையான மரங்கள் தீக்கிரையாகின

காட்டுத்தீ சம்பவங்கள் 158% அதிகரிப்பு: பழமையான மரங்கள் தீக்கிரையாகின

எழுத்தாளர் Bella Dalima

02 Jun, 2020 | 4:44 pm

Colombo (News 1st) பருவநிலை மாற்றம் காரணமாக மிகவும் பழமையான மரங்கள் அனைத்தும் காட்டுத்தீக்கு வேகமாக இரையாகி வருவதாக செய்மதி தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

6 விநாடிகளுக்கு ஒருமுறை கால்பந்தாட்ட மைதானம் அளவில் மழைக்காடுகளிலுள்ள மரங்கள் அழிவடைந்து வருவதாக Maryland பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் 30,000-இற்கும் மேற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக, கடந்த 6 ஆண்டுகளில் காட்டுத்தீ சம்பவங்கள் 158% அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காலநிலை மாற்றம், காடழிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாவரங்கள் பெருமளவில் அழிவடைந்து வருகின்றன.

கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவில் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் பிரேசிலில் பெருமளவிலான காடுகள் தீக்கிரையாகின.

எவ்வாறாயினும், இந்தோனேசியா மற்றும் கொங்கோ ஜனநாயகக் குடியரசு போன்ற நாடுகள் மரங்களின் அழிவைப் பெரிதும் குறைத்துள்ளன.

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ 6 மடங்கான பேரழிவை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்