ஹெரோயினுடன் திவுலப்பிட்டியவில் இருவர் கைது

ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் திவுலப்பிட்டியவில் இருவர் கைது

by Staff Writer 02-06-2020 | 6:04 PM
Colombo (News 1st) ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் திவுலப்பிட்டிய பஸ் நிலைய வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ​போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிம்புலாபிட்டிய மற்றும் மினுவங்கொடை பகுதிகளைச் சேர்ந்த 22 மற்றும் 42 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த ஹெரோயின் கடத்தல் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் வழிநடத்தலில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் 403 சந்தேகநபர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் நடத்தப்பட்ட 394 சுற்றிவளைப்புகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, சந்தேகநபர்கள் வசமிருந்த ஹெரோயின், மாவா, கஞ்சா, ஐஸ் போதைப்பொருட்களுடன் மதுபான போத்தல்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.