நாட்டில் 11ஆவது கொரோனா மரணம் பதிவானது

நாட்டில் 11ஆவது கொரோனா மரணம் பதிவானது

நாட்டில் 11ஆவது கொரோனா மரணம் பதிவானது

எழுத்தாளர் Fazlullah Mubarak

01 Jun, 2020 | 10:32 am

கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் பதிவாகும் 11ஆவது மரணம் சற்றுமுன் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க உறுதிப்படுத்தியதாக அரசாங்க தகவல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

45 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் குவைத்திலிருந்து இலங்கைக்கு வந்தவர் என்பதுடன் ஹோமாகம வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

அவரின் கையொப்பத்துடன் இந்த தகவல் வௌியாகியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்