09 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக அமெரிக்க மண்ணிலிருந்து சென்ற விண்கலம்

09 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக அமெரிக்க மண்ணிலிருந்து சென்ற விண்கலம்

09 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக அமெரிக்க மண்ணிலிருந்து சென்ற விண்கலம்

எழுத்தாளர் Fazlullah Mubarak

01 Jun, 2020 | 10:47 am

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரொக்கட்டில் முதல் முறையாக விண்கலமூடாக பயணித்த இருவரும் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்துள்ளனர்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் ரொக்கட் பயன்பாட்டிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக அமெரிக்க மண்ணிலிருந்து அந்த நாட்டை சேர்ந்த வீரர்கள் சனிக்கிழமை விண்வெளிக்கு பயணித்தது.

கசிவு, அழுத்தம் மற்றும் வெப்பநிலை சோதனைகளுக்கு பின்னர் குறித்த ரொக்கட் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.

அதில் பயணித்த இருவரையும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்கனவே இருந்த ரஷ்ய மற்றும் அமெரிக்க குழுவினர் வரவேற்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்