நாட்டில் 1639 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் 1639 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் 1639 பேருக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Staff Writer

01 Jun, 2020 | 7:10 pm

Colombo (News 1st) 01.06.2020 ; 7.00 PM: நாட்டில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1639 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

———————————————————————————————————————————-

01.06.2020 ; 5.30 PM: நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,635 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

———————————————————————————————————————————

01.06.2020 ; 10 AM: இலங்கையில் Covid – 19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1633 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் 13 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

வௌிநாடுகளில் இருந்து வருகைதந்த 9 பேரும் கடற்படையைச் சேர்ந்த நால்வரும் இதில் அடங்குகின்றனர்.

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த 20 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.

அதற்கமைய, இதுவரை 801 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனடிப்படையில், தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 822 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் 11 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதேவேளை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் பிரவேசிக்கும் பகுதியில் தொடர்பாடல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தின் லெப்டினன் கேர்னல் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

தேசிய தொற்றுநோயியல் பிரிவில் தற்போது அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக Covid – 19 ஐ தடுக்கும் தேசிய செயலணி குறிப்படுகின்றது.

இதேவேளை, நேற்று மற்றும் நேற்று முன்தினம் ஆகிய இரண்டு நாட்களில் கொரோனா தொற்றுக்குள்ளான 28 கடற்படை வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, கடற்படையைச் சேர்ந்த 753 பேர் Covid – 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அவர்களில் 403 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளதுடன், 347 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்